இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு இடங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகின்றது. மேலும் கேரளாவில் காசர்கோடு, இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதனால் வரும் ஜூலை 7 தேதி வரை ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைய கூடும் எனவும் மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.