ஆன்லைன் ஆர்டர்! டெலிவரிக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்!
ஆன்லைனில் ஆர்டர் செய்த போனை கொடுக்கச் சென்ற டெலிவரி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த வாலிபரின் உடல் போலீசாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் இறந்து போன வாலிபர் பெயர் ஹேமந்த் நாயக் வயது 23. இவர் ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி இவர் லஷ்மிபுரா என்ற பகுதியில் ஹேமந்த் தத்தா என்பவருக்கு ஆர்டர் செய்த ஐபோனை டெலிவரி செய்ய சென்றுள்ளார். போனை டெலிவரி செய்ததும் அதற்குரிய ரூ. 46000 பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பணத்தை தர மறுத்து ஹேமந்த் தாத்தா இவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
ஐபோனுக்கு கொடுக்க பணம் இல்லாததால் அவரை தனது வீட்டுக்குள் வைத்து அவரை குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை நான்கு நாட்கள் தனது வீட்டின் வீட்டின் உள்ளேயே வைத்துள்ளார். பின்னர் அவரை ரயில் நிலைய தண்டவாளத்தில் போட்டு எரித்துள்ளார். அவர் உடலை சாக்கு முட்டையில் வைத்து கட்டி டூவீலரில் கொண்டு சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வாலிபரை கைது செய்துள்ளனர்.
டெலிவரி செய்த ஐபோனுக்கு பணத்தை திருப்பி கேட்டதால் ஊழியரை கொடூரமாக கொலை செய்த ஹேமந்த் தத்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.