சாலையோர சிலைகளை அகற்ற உத்தரவு! உயர் நீதிமன்றத்தின் அடுத்த அதிரடி!
பொது இடங்கள் ,சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் மற்றும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்தவகையில் அரக்கோணம் அருகே கன்னிகை என்ற ஒரு கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் புறம்போக்கு நிலம் ஒன்றில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது.இந்த சிலையை அகற்றக்கோரி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.தாசில்தார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் வீரராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். இந்த வழக்கானது எஸ் எம் சுப்பிரமணியம் நீதிபதி முன்னிலையில் இன்று அமர்வுக்கு வந்தது. அதில் அம்பேத்கர் சிலை அகற்றியது தவறு என வீரராகவன் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு நீதிபதி கூறியதாவது,சாலையோரங்கள்,பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில்தான் கன்னிகை கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது. அதனால் அது விதிமீறல் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவின்படி தான் அரசு செயல்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அதனால் சிலையை அகற்றியது குற்றமில்லை என்று நீதிபதி கூறி வழக்கை முடித்து வைத்தார்.
அதேபோல மூன்று மாதத்திற்குள் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், சாலையோரங்களில் உள்ள சிலைகளை அகற்ற வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தலைவர் பூங்கா என்று ஒன்றை அமைத்து அதில் சாலையோரம் உள்ள தலைவர்களின் சிலைகளை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். யார் அங்கு தங்கள் தலைவர்கள் சிலையை நிரூபிக்கிறார்களோ அவர்களே சிலையை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் சாதி, அரசியல் போன்றவற்றை வெளிகாட்டும் வகையில் எந்த ஒரு சிலையையும் நிறுவ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.