சென்னை: தமிழக அரசு கைத்தறி நெசவாளர்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகை அன்று விலை இல்லாத வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தினை 1983 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ஆல் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடப்பாண்டு வரை அனைத்து ஆண்டுகளிலும் இந்த இலவச வேட்டி சேலை திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்த இலவச வேட்டி, சேலை திட்டம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. மேலும் 2025 ஆண்டிற்கான ஒரு கோடியே 77 லட்சத்தி 64 ஆயிரத்து 476 சேலைகளும் அடுத்ததாக ஒரு கோடியே 27 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கி வெளியிட்டு இருந்தது. இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இலவச வேட்டி சேலைகளை ஜனவரி 10-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கைத்தறித்துறை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தினால் 2.50 லட்சம் நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று இருக்கின்றனர். மேலும் இலவச வேட்டி சேலைகளுக்கான கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கான மாற்றும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த 2025 பொங்கல் பண்டிகைக்கு 1. 75 கோடி சேலைகளும் ஏறத்தாழ 1.77 கோடி வேஷ்டிகளும் வழங்கப்பட உள்ளது.