ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்!

0
170

ஆஸ்கர் கொண்டாடிய ஜெய் பீம் திரைப்படம்!

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்த இந்தப் படம்,  பல்வேறு தரப்பில் இருந்தும், திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வெற்றி படமாக அமைந்தது.

மேலும் இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும். இந்த இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படமாக ‘தி ஷஷாங் ரிடம்ஷன்’ இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், இந்த படத்தை பின்னுக்கு தள்ளி முதன் முறையாக ஐஎம்டிபி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது ‘ஜெய்பீம்’ திரைப்படம். அதனை தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது. இந்நிலையில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இன்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர். இந்த ஆஸ்கர் விருதினை அடைவது அவ்வளவு எளிதல்ல. ஓராண்டில் உலகளவில் வெளியாகும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சில திரைப்படங்களில் சிறந்த படமாக விளங்கும் ஒரு திரைப்படத்திற்கே இந்த ஆஸ்கர் விருது வழங்கப்படும்.

அந்த ஆஸ்கரின் யூடியூப் சேனலில் ‘சீன் அட் தி அகாடமி’ என்ற தலைப்பில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறது ஆஸ்கர் அகாடமி. அந்த வீடியோவில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் சில காட்சிகளையும், படத்தின் இயக்குனர் அந்த படத்தை பற்றி பேசும் சில விவரங்களையும் ஆஸ்கர் பகிர்ந்துள்ளது. ஆஸ்கர் அகாடமியின் யூடியூப் பக்கத்தில் ‘சீன் அட் தி அகாடமி’ பிரிவில் தமிழ் திரைப்படம் ஒன்று இடம்பெறுவது இதுவே முதல்முறை.

author avatar
Parthipan K