சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்கார் நாயகனின் புது முயற்சி!!!

Photo of author

By Parthipan K

சுதந்திர தினத்துக்கு புதுமுயற்சியாக 65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ.ஆர்.ரகுமானின் ‘தமிழா தமிழா’ என்ற பாடலை 65 பாடகர்களும் பாட உள்ளார்.

இந்த பாடலை ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜு ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இந்த் வீடியோ லிட்பாக்ஸ் மீடியாவால் தொகுக்கப்பட்டுள்ளது.

பின்னணி பாடகர் ஶ்ரீநிவாஸ், யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளார். 

இதில் இவருடன் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், பாடகி சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் அறங்காவலர்களாக பொறுபேற்கிறார்கள்.

இதுபற்றி ஸ்ரீனிவாசன் கூறியதாவது: கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்து கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவுவது இந்த அமைப்பின் நோக்கம்.

இதன் முயற்சியாக ‘டுகெதர் அஸ் ஒன்’ என்ற பாடலை, ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் மோகன்லால், மற்றும் யஷ் ஆகியோர், ஆகஸ்ட் 15 -ஆம் நாள், காலை 11 மணியளவில் வெளியிடுகிறார்கள்.

இசை புயல் ஏ ஆர் ரகுமானின் உடைய பிரபலமான பாடல்களை கொண்டு 65 பாடல்கள் ஒருங்கிணைந்து வீட்டிலிருந்தபடியே ஐந்து மொழிகளில் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இதன் மூலம் மக்களிடையே நிதி உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும் ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.