இன்று முதுமை கால நோய்களை இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றோம்.30,40 வயதிலேயே அனைத்து நோய்களுக்கும் சொந்தக்காரர்களாகிவிடுகின்றோம்.முன்பெல்லாம் நாம் பயந்த நோய்கள் தற்பொழுது சாதாரணமான பாதிப்பாக மாறிவிட்டது.
குறிப்பாக எலும்பு சார்ந்த நோய்களால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.நாம் இளம் பருவத்தில் எலும்பை வலுப்படுத்தும் உணவுகளை உட்கொண்டால்தான் முதுமை காலத்தில் உடல் செயல்படுகள் நன்றாக இருக்கும்.தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட முதுகு வலி,கை கால் வலி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பெண்களுக்கு தங்கள் 30 வயதிலேயே எலும்பு அடர்த்தி குறைந்து பாதிப்புகள் ஏற்படுகிறது.30 வயதிற்கு மேல் எலும்பு தேய்மானமாகி வலுவில்லாமல் போகிறது.இதில் எலும்பு புரை நோய் எலும்புகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துவிடும்.
எலும்பு புரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் கழுத்து,முதுகு போன்ற எலும்புகளின் வலிமை குறைந்து வலி அதிகரித்துவிடும்.இந்த எலும்பு புரை நோய் மெனோபாஸ் காலக்கட்டத்தில் உள்ள பெண்களை அதிகமாக பாதிக்கிறது.
எலும்பு புரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாரத்தில் 5 நாட்களுக்கு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.உணவில் சோடியம் சத்துக்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.ஆரஞ்சு,பால்,முழு தானிய உணவுகளை சாப்பிடலாம்.
சிறு தானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.ராகி உணவை அடிக்கடி உட்கொண்டால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.கீரைகள்,காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.தினமும் சூரிய ஒளியில் நடக்க வேண்டும்.பிரண்டை,முடக்கத்தான்,கருப்பு எள்,கருப்பு உளுந்து போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.மது மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிட வேண்டும்.
எலும்பு அடர்த்தி அதிகரிக்க பாலில் பாதாம் பொடி கலந்து குடிக்கலாம்.பிரண்டை துவையல் செய்து உட்கொண்டால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.