நமது எலும்புகள் பலம் பெற சாப்பிட வேண்டியவை!! எளிதில் கிடைக்கக்கூடியது!!

Photo of author

By Selvarani

நமது எலும்புகள் பலம் பெற சாப்பிட வேண்டியவை!! எளிதில் கிடைக்கக்கூடியது!!

முட்டைகோஸில் கால்சியம் சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சுண்ணாம்புச்சத்து அதிக இருப்பதால் இது எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் முட்டைகோஸ் நல்ல உணவாக இருக்கிறது. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

நமது உடலில் இருக்கும் தசைகள் மற்றும் உறுப்புகளை பாதுகாப்பதில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறதோ அதை வைத்து தான் அவர்களின் ஆரோக்கியத்தை சொல்ல முடியும். அதனால் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க முட்டைக்கோஸ் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க முட்டைக்கோஸ் சாப்பிடலாம்
முட்டைக்கோஸ், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது
சிலிகான், சல்பர் சத்துக்கள் முட்டைக்கோஸில் இடம் பெற்றுள்ளன. முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது.

உடலுக்கு ஊட்டம் தரும் முட்டைகோஸ் உடல் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. தலைமுடி உதிர்வதைக் குறைக்கும்.
சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். முட்டைகோஸில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உட்கொள்வதன் மூலம் அதிக நன்மைகளைப் பெற, வாரத்திற்கு குறைந்தது 3-4 நாட்களுக்கு அரை கப் அளவு சாப்பிடுங்கள். முட்டைக்கோஸ் தயாரிப்பதற்கு பல வழிகள் இருப்பதால், முட்டைக்கோஸை சேர்ப்பது மிகவும் எளிதானது. முட்டைக்கோஸை சாப்பிட்டு அதன் நன்மைகளை பெற்று மகிழுங்கள்.