சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீர் தொற்று வரை அனைத்திற்கும் இந்த ஒரு ட்ரிங்க் போதும்!! குடித்த10 நிமிடத்தில் நிவர்த்தியாகும்!!

0
156
#image_title

கோடை காலம் வந்தாலே வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், நம் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படும். வெயில் காலத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சினை சிறுநீர் கடுப்பு, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்.

இது ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவரும் இந்த பிரச்சினையை எதிகொள்வார்கள். இதற்கு தண்ணீர் அதிக அளவு எடுத்து கொள்ளாதது தான் காரணமாக உள்ளது. கோடை காலங்களில் குறைந்தது 4 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அதிகமாக சேர்ந்து, சிறுநீரின் அடர்த்தி அதிகமாகி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது.

கோடையில், உடலில் சீக்கிரமாக நீரிழப்பு ஏற்படும். நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லையென்றால் சிறுநீர் போகும் போது எரிச்சல் ஏற்படுவதோடு, சிறுநீர் பாதையில் தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சினைகளை போக்குவதற்கான வழிகளை பார்க்கலாம்.

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு சுடு தண்ணீர், கை பொறுக்கும் சூட்டில் எடுத்துக் கொள்ளவும். இதில் 1 ஸ்பூன் அளவு உப்பு போட்டு கரைத்து கொள்ளவும். பிறகு இதை சிறுநீர் கழிக்கும் பகுதியில் நன்றாக அடித்து விடவும். இப்படி செய்யும் போது உடனடியாக சிறுநீர் வெளியேறி, எரிச்சல், கடுப்பு குறைய வாய்ப்புள்ளது. அடுத்ததாக ஒரு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அப்படியே மென்று சாப்பிடும் போது சிறுநீர் தொற்று, எரிச்சல் போன்றவை குறையும். சின்ன வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதாலும் இந்த பிரச்சினை குறைகிறது.

எனவே வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாக குடிக்கவும், குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதாலும் இது போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

author avatar
CineDesk