நம் விரல் மை அது தான் ஜனநாயக வலிமை!! ஒரு விரல் புரட்சியின் முக்கியதுவத்தை எடுத்து கூறிய விவேக்!!
நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து பிரபலங்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சமூக வலைத்தளப் பக்கங்களில் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து சற்று முன்பு விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நமக்கு கிடைக்க கூடிய ஜனநாயக உரிமை, கடமை வாக்களிப்பது. வாக்களிப்பது என்பது நமது கடமையாகும். ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு ஓட்டும் நமது உரிமை அதை நாம் விட்டுக்கொடுக்க கூடாது. நாம் ஒருவர் ஓட்டு போடுவதால் என்ன மாற்றம் ஏற்பட போகிறது அல்லது ஓட்டு போட வில்லை என்றால் என்ன ஆகிவிட போகிறது என்று நினைக்க கூடாது. அப்படி செய்வது ஜனநாயகத்திற்கு நாம் செய்யும் பெரும் தீங்கு ஆகும். ஆளுமையையும் தலைமையையும் தேர்ந்தெடுப்பது நம் விரல் மை. அது தான் ஜனநாயகத்தின் வலிமை அதை எப்பொழுதும் மறந்துவிட கூடாது. ஆகையால் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்றோ வயதானவர்கள் அல்லது முடியாதவர்கள் தபால் மூலமாகவோ வாக்குகளை பதிவு கண்டிப்பாக செய்யுங்கள். வாழ்க இந்திய! வாழ்க தமிழ்நாடு! வாழ்க தமிழ்! ஜெய்ஹிந்த்!! என்று கூறி வீடியோவை முடித்துக் கொண்டார் விவேக்.