வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா! திமுகவின் முக்கிய புள்ளிக்கு ஆப்பு வைத்த காவல்துறை!

0
102

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்க இருக்கிறது. ஆகவே இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமாக செய்து வருகிறது..
தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்க இருக்கிறது. அதோடு பதட்டமான மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படை காவல்துறையினர் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதன்படி காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குப்பத்தா மோட்டூர் பகுதியில் நேற்று திமுகவின் பிரமுகர் கோபி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அவரை கையும் களவுமாக காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ரூபாய் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் திமுகவின் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல கோபியை கைது செய்த காவல்துறையினர் சிறையிலடைத்து இருக்கின்றன. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கறது..

அதோடு காட்பாடி சட்டசபைத் தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் மீது 171 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வாக்குகளை பெற முயற்சி செய்தல், அவதூறாக பேசி அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.