நீண்ட கால செரிமானப் பிரச்சனைக்கு எளிய தீர்வு தரும் நம் பாரம்பரிய வைத்தியம்!!

Photo of author

By Divya

நீண்ட கால செரிமானப் பிரச்சனைக்கு எளிய தீர்வு தரும் நம் பாரம்பரிய வைத்தியம்!!

Divya

அதிக உணவு உட்கொள்ளுதல்,உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை,உணவு உட்கொண்ட உடனே உறங்குதல்,நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.

செரிமானப் பிரச்சனை அறிகுறிகள்:

1)வயிற்று வலி
2)காற்று பிரிதல்
3)வயிறு வீக்கம்
4)பசியின்மை
5)நெஞ்சு எரிச்சல்
6)வாயில் துர்நாற்றம் வீசுதல்
7)வயிற்றுப்போக்கு ஏற்படுதல்

செரிமானப் பிரச்சனையை போக்கும் பாரம்பரிய வைத்தியக் குறிப்புகள்:

*எலுமிச்சை சாறு
*புதினா இலைகள்
*இஞ்சி துண்டு

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது பாத்திரம் ஒன்றை கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் புதினா இலை மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.

இஞ்சி,புதினா நன்கு கொதித்து வந்ததும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகுங்கள்.இந்த பானம் செரிமானக் கோளாறுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.

*பட்டை
*சோம்பு
*தேன்

பாத்திரம் ஒன்றில் ஒரு துண்டு பட்டை,ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் செரிமானக் கோளாறு முற்றிலும் குணமாகும்.

*நெல்லிக்காய்
*தேன்

ஒரு முழு நெல்லிக்காயை எடுத்து சதை பற்றை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் செரிமானக் கோளாறு முற்றிலும் குணமாகும்.