பெண்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டி!! இதற்கு கழற்சிக்காயில் தீர்வு இருக்கு!!

Photo of author

By Divya

பெண்கள் கருவுறுதலுக்கு தடையாக இருக்கும் கருப்பை நீர்க்கட்டி!! இதற்கு கழற்சிக்காயில் தீர்வு இருக்கு!!

இன்றைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்கட்டி பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் உருவாகுவதினால் கருவுதல் ஏற்படுவது தாமதமாகிறது.சில பெண்களால் கருவுற முடியாமல் போய்விடுகிறது.

கருப்பையில் நீர்க்கட்டி இருந்தால் முறையற்ற மாதவிடாய்,ஹார்மோன் மாற்றம் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடும்.

கருப்பையில் நீர் கட்டி வருவதற்கான காரணங்கள்:

1)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
2)மன அழுத்தம்
3)வேலைப்பளு

கருப்பை நீர்க்கட்டிக்கான அறிகுறிகள்:

1)முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல்
2)அதிகமாக முடி கொட்டுதல்
3)குரல் வேறுபடுதல்
4)முகத்தில் பரு
5)உடல் எடை அதிகரித்தல்
6)மன அழுத்தம்
7)ஹார்மோன் சுரப்பு அதிகரித்தல்

கருப்பை நீர்க்கட்டி கரைய வீட்டு வைத்தியம்:

*கழற்சிக்காய் பொடி
*மோர்
*மிளகு

நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய கழற்சிக்காய் பொடி 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தமான கெட்டி தயிர் சேர்த்து தண்ணீர் ஊற்றி மோர் பதத்திற்கு கடைந்து எடுத்துக் கொள்ளவும்.

தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்தும் மோர் செய்யலாம்.அதன் பின்னர் நான்கு கரு மிளகு எடுத்து உரலில் போட்டு இடித்து மோரில் கலந்து கொள்ளவும்.பின்னர் கழற்சிக்காய் பொடி 10 கிராம் அளவிற்கு மோரில் கலந்து காலையில் உணவு உட்கொள்வதற்கு முன்னர் குடித்து வந்தால் கருப்பையில் உள்ள கட்டிகள் அனைத்தும் கரைந்துவிடும்.

*கச்சக்காய்
*தண்ணீர்

நாட்டு மருந்து கடையில் கச்சக்காய் பொடி கிடைக்கும்.அதை 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கச்சக்காய் பொடி 10 கிராம் சேர்த்து கலந்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு குணமாகும்.

*வெந்தயம்
*தேன்

100 மில்லி சூடான நீரில் 25 கிராம் வெந்தயப் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து பருகி வந்தால் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு குணமாகும்.

*இலவங்கப்பட்டை பொடி

தினமும் 20 கிராம் இலவங்கப்பட்டை பொடி சாப்பிட்டு வந்தால் கருப்பை நீர்க்கட்டி சில வாரங்களில் கரைந்துவிடும்.