நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதை அடுத்து நாடு முழுவதும் நோய் தொற்று தடுப்பூசிகள் மிக வேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.அதே நேரம் நோய் தொற்று பரவலும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
அதிலும் தமிழகத்தில் வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள்.
நோய் தொற்றுக்கு எதிராக தேசிய தடுப்பூசி திட்டம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. 100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை நெருங்கி வருவதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு சார்பாக இதுவரையில் 102 கோடியே 48 லட்சத்து 12565 தடுப்பூசிகளை வினியோகம் செய்திருக்கிறது. இவற்றில் பயன்படுத்தியதை மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்கள் இடமும், 10 கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டிருக்கிறது.