ஓவியா, யோகி பாபு நடிக்கும் பூமர் அங்கிள்… ட்ரண்ட்டிங் வார்த்தையை தலைப்பாக வைத்த படக்குழு

Photo of author

By Vinoth

ஓவியா, யோகி பாபு நடிக்கும் பூமர் அங்கிள்… ட்ரண்ட்டிங் வார்த்தையை தலைப்பாக வைத்த படக்குழு

Vinoth

ஓவியா, யோகி பாபு நடிக்கும் பூமர் அங்கிள்… ட்ரண்ட்டிங் வார்த்தையை தலைப்பாக வைத்த படக்குழு

நடிகை ஓவியா மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடித்த ‘களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.என்னதான் வெள்ளித்திரை மூலமாக புகழ் பெற்றிருந்தாலும் அதிக அளவில் பேரும் புகழையும் தேடித் தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட போது, அவருக்கு ஆதரவாக ஓவியா ஆர்மி ஒன்றை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபல்யத்தையும் சரியாக பயன்படுத்தாமல் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி அவர் தற்போது நடித்துள்ள படம்தான் ‘பூமர் அங்கிள்’. இந்த படத்தில் அவரோடு யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்துக்கு ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரண்ட்டிங்காக செல்லும் வார்த்தையான பூமர் அங்கிள் என்ற வார்த்தையை வைத்துள்ளனர். இந்த படத்துஇன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.