மஜாபா செம கண்டுபிடிப்பு !! நீங்கலாம் வேற லெவல்! என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!

0
76

மஜாபா செம கண்டுபிடிப்பு !! நீங்கலாம் வேற லெவல்! என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!

ஐ.ஐ.டி காரக்பூரின் ஆராய்ச்சியாளர்கள் குழு பொது இடங்களில் சமூக தூரத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவின் (IA) அடிப்படையிலான கருவியை உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேராசிரியர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி மற்றும் பேராசிரியர் ஆதித்யா பந்தோபாத்யாய் தலைமையில் இந்த குழு தனிநபர்களுக்கிடையிலான இடைவெளியைக் கண்டறியக்கூடிய சாதனத்தை வடிவமைத்துள்ளது. இவை குறைந்த விலை கொண்டது என்று ஐஐடி காரக்பூரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சமூக விலகல் விதிமுறைகளை மீறும் போதெல்லாம் இந்த சாதனம் எச்சரிக்கை ஒலியை ஒலிக்கச் செய்யும். பொதுக் கூட்டங்கள், சந்தைகள், மால்கள் போன்ற இடங்களில், மக்கள் பெருமளவுக்கு கூடுகிறார்கள். அப்போது இந்த கருவியை ஒரு இடத்தில் பொருத்தி வைத்துவிட்டால் போதும் மக்கள் நெருங்கும்போது சைரன் ஒலியை எழுப்பும்.

டிஸ்டன்ஸ் ப்ளீஸ் என அது ஒளியை எழுப்புகிறது.நெருப்பு பரவும்போது, எப்படி அலுவலகங்களில் உள்ள சைரன் எழுமோ அதுபோலத்தான் இதுவும் இந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலமாக சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பது கணக்கிடப்படுகிறது.

லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் போது மாணவர்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஹார்ட்வேர்களை கொண்டு இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.

அண்மையில் ஐ.ஐ.டி கரக்பூரின் இயக்குநர் பேராசிரியர் வி.கே.தீவரி முன்னிலையில் இந்த கருவி டெமோ செய்துபார்க்கப்பட்டது.ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டிய அவர் சமூகத்தில் கடைசி நபரின் வாழ்க்கைத் தரத்தையும்  மேம்படுத்துவது நமது பொறுப்பு என்றார்.எனவே  பெருமிதத்தோடு அவர்களை பாரட்டுவோம் எனவும்  கூறியிருந்தார்.

author avatar
Parthipan K