கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி சார்ந்த திரு ராஜா என்பவர் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் அளவு அவருக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை கண்காணிக்காமல் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் சிலிண்டர் போன்றவற்றை கழட்டி எடுத்துச்சென்ற காரணத்தால், அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நோய் தொற்று பாதிப்பு காரணமாக, ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுடன் மருத்துவர்களும் போராடி வருகிறார்கள். அதனை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று தெரியாமல் திண்டாடி வரும் நிலையில், தற்போது இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும்
தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை பெறுவோர்க்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்வதிடவும்,
இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும்.(2/2) @CMOTamilnadu— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 21, 2021
அதோடு தற்போது இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதோடு மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருக்கிறதா என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுவான கருத்து இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. மூச்சுத் திணறல் உண்டாகி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திட்டக்குடி திரு.ராஜா அவர்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் இருக்கிறதா என்பதை உறுதி செய்யாமல் ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவற்றை அரசு மருத்துவர் ஒருவரே எடுத்துச் சென்றதால் உயிரிழந்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அதோடு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்திடவும், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் உயிர்களை காத்திட உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திட வேண்டும் என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.