உங்கள் வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள்; இந்திய ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் அறிவுரை !!!

0
122

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவா்களை விமா்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ராணுவ தளபதி ஒருவர் அரசியல் பேசியதற்கு, பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிபின் ராவத்தின் கருத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான ப. சிதம்பரம் கட்சி கூட்டமொன்றில் பேசுகையில், “அரசை ஆதரிக்கும் வகையில் பேசும்படி டி.ஜி.பி. மற்றும் ராணுவ தளபதி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என்பது ஓர் அவமானம்.ராணுவ தளபதி ராவத்திடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன்.  நீங்கள் ராணுவ தலைமை தளபதியாக இருக்கிறீர்கள்.  உங்களது வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள். அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவர்கள் செய்திடுவார்கள்.  நீங்கள் எப்படி போரிட வேண்டும் என்று கூறுவது எங்கள் வேலையல்ல என்பதுபோல், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு கூறுவது ராணுவத்தினரின் பணியல்ல.  நீங்கள் உங்களது யோசனையின் படி போரிடுங்கள்.  நாட்டின் அரசியலை நாங்கள் கவனித்து கொள்வோம்” என்று கூறினார்.

Previous articleகல்வி அமைச்சர் செங்கோட்டை யன் முக்கிய அறிவிப்பு?
Next articleசுங்கவரி கட்டணத்தைக் முறைப்படுத்த வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ்?