பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
185

பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றன. இதற்கிடையில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தையும் தொடங்கி தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற காதல் கதையை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக பல புதுமுகங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். வழக்கமாக தன் படங்களில் பணிபுரியும் கலைஞர்களுக்கு பதில் புதுமுக கலைஞர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளார். காதல் கதையில் அரசியல் சார்ந்து இந்த படத்தை இயக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலா படத்துக்கு பிறகு பா ரஞ்சித் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகும் படமாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ அமைந்துள்ளது.

Previous articleதண்ணீரில் மிதக்கும் கரையோர கிராமங்கள்! திருச்சிக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு!
Next articleதொடரும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்கும் அவலம் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன!..