பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீர் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும்!!FSSAI அதிரடி உத்தரவு!!

Photo of author

By Gayathri

பார்க்கிங் செய்யப்பட்ட தண்ணீரை அதிக ஆபத்துள்ள உணவாக வகைப்படுத்த உள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.

 

கண்டிப்பாக இனி பார்க்கிங் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த உணவை பாதுகாப்பு துறையின் புதிய விதிகள் :-

 

அனைத்து பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களும் இனி வருடாந்திர ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள். புகார்கள் மற்றும் ஆபத்து அடிப்படையிலான ஆய்வுகளை ஆய்விற்கு உட்படுத்தப்படுவார்கள்.

 

உரிமம் அல்லது பதிவு வழங்கப்படுவதற்கு முன்பு இந்த ஆய்வுகள் நடைபெறும்.இந்த நடவடிக்கையானது அதிக ஆபத்துள்ள வகையின் கீழ் வரும் தயாரிப்புகள் அனைத்திற்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இனி தண்ணீர் கேன்களுக்கு வருடா வருடம் இந்த சோதனை நடக்கும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முக்கிய குறிப்பு :-

 

சமீபத்தில்தான் இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) ஆகியவை இணைந்து வழங்கிய வழிகாட்டுதலில் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்று எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.