தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!!

0
310
#image_title

தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் உட்டபட  3 பேருக்கு பத்ம விருதுகள்!!

தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய நடிகர்களுள் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். தனது 100 வது படமான *கேப்டன் பிரபாகரன்* படத்தின் மூலமாக ‘கேப்டன் விஜயகாந்த்’ எனும் பட்டத்தை பெற்றார்.  

இவர் திரையுலகம் மட்டுமில்லாமல் அரசியலிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். பசி என்று வருபவர்களுக்கு வயிறார உணவு வழங்கும் வள்ளல் அவர். ஆனால் அப்பேர்ப்பட்ட மனிதனின் வாழ்வையும் இந்தப் பொல்லாத காலம் திருப்பிப் போட்டது.

முன்னதாகவே நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். 

இதனைத் தொடர்ந்து கலைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக கேப்டன் விஜயகாந்த்க்கு 2024 ஆண்டின் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

குடியரசு தினமான இன்று இந்தியாவில் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூசன் ஆகிய மூன்று விருதுகளும் தனிமனிதர்களின் பணியை ஊக்குவிக்கும் விதமாக வழங்குவதாகவும்.

இதில் 2024 ஆம் ஆண்டின் விருது பட்டியல் இன்று வெளியானது. அதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகரும் ,அரசியல் பிரமுகருமான கேப்டன் விஜயகாந்திற்கு “பத்ம பூஷன்” விருது அறிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘திருமதி வைஜெயந்திமலா பாலி’ மற்றும் ‘திருமதி பத்மா சுப்பிரமணியம்’ அவர்களுக்கும் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக “பத்ம விபூஷன்” விருதுகள் அறிவிக்கப்பட்டன . 

இதுமட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த பலருக்கும் பல சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டது. 

விருதுகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  ராஷ்டிரபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முன்னிலையில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தனர்.

Previous articleகுறத்தி மகன் படத்தில் கமலஹாசன்! அவரைப் பார்த்துள்ளீர்களா!
Next articleகவச்’ தானியங்கி, ‘பிரேக்கிங் சிஸ்டம்’ செயல்திறன் பரிசோதனை வெற்றி – வடக்கு மத்திய ரயில்வே!