தன்னை மறந்து அடித்த பத்மினி! படக்குழுவினர் ஓடிப்போய் நிறுத்திய சம்பவம்

0
423
#image_title

சிவாஜி கணேசன் தனது அற்புதமான நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார். ஒரு கதாபாத்திரத்தை அவரிடம் கொடுத்தால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் தன்மை சிவாஜிக்கு உண்டு.

 

நீ பிச்சைக்காரனாக நடிக்க வேண்டும் என்றால் கூட பிச்சைக்காரனை உற்றுப் பார்த்து, அடுத்த நாள் அவரைப்போலவே அப்படியே நடிப்பாராம் சிவாஜி. அப்படி சிவாஜி ,பத்மினி, எஸ் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளரும் இயக்குனரும் நினைத்து உள்ளார்கள்.

 

இந்தப் படத்தை மூவரும் போட்டி போட்டு நடித்து வெளிகாட்டி மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த படம் அது.

 

இப்படம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தெய்வப்பிறவி. ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிடும்போது அந்தப் படத்தில் கதையுமிருந்து, பொருத்தமான கலைஞர்களும் இருந்துவிட்டால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப் படமாகும். அதே படம் வேறு மொழியில் படமாகின்றபோது அந்த மொழியிலும் பொருத்தமான கலைஞர்கள் இருந்தால் தான் படம் வெற்றிப் பெறும். இல்லையென்றால் படுதோல்வியை சந்தித்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை தெய்வப்பிறவி படத்திற்கு ஏற்பட்டது.

 

இது சிவாஜி கணேசன் ஒரு மேஸ்திரி ஆக நடிக்கிறார். மேஸ்திரியிடம் வேலை பார்க்கும் சித்தாளாக பத்மினி நடிக்கிறார். பத்மினியின் தம்பியாக எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்கள் நடித்திருந்தார்.

 

மேஸ்திரி சிவாஜிகணேசனுக்கு சித்தாள் பத்மினியுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்படி நன்கு போய்க் கொண்டிருந்த குடும்பத்தில் சிவாஜியின் சொந்தக்காரர்கள் என ஒரு சிலர் நுழைகிறார்கள்.

 

காலம் மாறுகிறது. மேஸ்திரிகாக இருந்த சிவாஜி காண்டாக்டராக உயர்கிறார். வசதி செல்ல செல்ல கணவனுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதேபோல் மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. தனது மாமா அக்காவின் மீது சந்தேகபடுகிறாரே, இவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது என தீயில் வேகம் ஒரு தம்பி.

 

இப்படி இருவரின் சந்தேகமும் எரிந்து அந்த குடும்பத்தையே சாம்பலாக்கி கொண்டிருக்கிறது.

 

இப்படி சந்தேகத்தில் போய்க் கொண்டிருந்த குடும்பத்தில், ஒரு நாள் சந்தேகத்தில் பத்மினியை சிவாஜி ஓங்கி அறைந்து விடுவார். பத்மினியை அறைந்ததை ராஜேந்திரன் பார்த்ததும் ,தன் அக்காவை அடித்து விட்டாரே என ராஜேந்திரன் சிவாஜியை மறுபடியும் அடித்து விடுவார்.

 

தனது கணவனையா அடிக்கிறாய் என்று தன் “தம்பியை கையில் உள்ள குடையாலேயே தன் நிலை மறந்து அந்த சம்பவம் உண்மையாகவே நடக்கிறது என்று நினைத்தாரோ பத்மினி, எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களை கு டையாலேயே அடித்து அந்த குடைக் கிழியும் அளவிற்கு அடித்துக் கொண்டே இருந்தாராம்.

 

இவ்வாறு மூன்று பேரும் உணர்ச்சிகரமாக நடித்தார்கள். படப்பிடிப்பு குழுவினரும் இப்பொழுது நடந்துக் கொண்டிருப்பபது படப்பிடிப்பு தான் என்பதை மறந்து ஓடிப்போய் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு அவர்களின் நடிப்பாற்றல் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட்டது.

 

எப்படி மூவரும் போட்டி போட்டு நடித்த இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யலாம் என்று AVM நினைத்திருக்கிறார். சிவாஜி வேண்டாம் என மறுத்திருக்கிறார்.

அவர் பேச்சையும் மீறி பிந்தியா என்று இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தனர். அந்த படம்படுதோல்வி அடைந்தது.

Previous articleதங்க தட்டில் சோறு உண்டவர்! கேட்பாரற்று கிடந்த சம்பவம்!
Next articleஉங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!