தங்க தட்டில் சோறு உண்டவர்! கேட்பாரற்று கிடந்த சம்பவம்!

0
197
#image_title

அந்த காலத்தில் பாகவதரை போல வாழ்ந்தவர்கள் இல்லை. வெறும் 14 படத்தில் உலகத்தின் உச்சத்தை தொட்டவர் அவர். இவரை போல் வாழ்ந்தவரும் இல்லை .

வீழ்ந்தவரும் இல்லை.

 

எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம்.

 

பத்திரிக்கையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை.

 

வாழ்க்கையின் சோதனைகளை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் வாழ்க்கையில்தான் விதி தாண்டவமாடும். இப்படி ஒரு நாள் வாலி ரயில் நிலையம் சென்று இருந்தாராம்.

 

வாலி சொன்னது ” சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன்.

 

ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்குகிறேன்.

 

‘ஓ நீங்கதான் அந்த வாலியா..?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. இன்று அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

 

அவர் தொட்டதால் அல்ல. எந்த ரயில்நிலையத்தில் அவர் ரயிலிருந்து இறங்கவிடாமல் மக்கள் அலை மோதினார்களோ, அங்கே கவனிக்க ஆளில்லாமல் தனியாக அவர் அமர்த்திருந்த நிலையை பார்த்து நிலைகுலைந்து விட்டேன். இன்று வாலி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

 

இவர் கடைசியாக நடித்த படம் சிவகாமி. இதில் நடிக்கும் போதே அவருக்கு கண்கள் தெரியாது. அதே போல் வசனங்கள் கூட பேச வராது. சினிமா எப்படி ஒருவரை மேலே தூக்கி முதல்வராகியதோ. அதேபோல் தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையில் சினிமாவே இவரை கீழே தள்ளி

கொலை செய்தது.

 

author avatar
Kowsalya