Piles: மூல நோயானது மலக்குடலில் ஏற்படும் வீக்கம் இது உள் மூலம் வெளி மூலம் என்று இரு வகைப்படும். அதிலும் உள்பக்கமாக மலக்குடலில் வீக்கம் ஏற்படும் பொழுது உன் மூலமாகவும் அதுவே ஆசனவாயில் வெளிப்புறப் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் வெளி மூலம் எனக் கூறுவர்.
குறிப்பாக மூல நோய் இருப்பவர்கள் அதிகளவு காரமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். இவர்களுக்கு மலமானது மிகவும் கடினமாகவும் ரத்தப்போக்குடலும் சிறுநீரகங்களில் காணப்படும். இவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வரும் சித்த வைத்திய முறையை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்
தான்றிக்காய்
கடுக்காய்
நாயுருவி இலை
துத்தி இலை
அம்மன் பச்சரிசி இலை
பிரண்டை
பொடுதலை இலை
அத்தி இலை
ஆவாரம் பூ
இவை அனைத்தும் தனித்தனியே 100 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
பின்பு வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது காய்ந்ததும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து 48 நாட்கள் ஒரு ஸ்பூன் என்று அதாவது 5 கிராம் அளவு சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும்.