முன்னாள் அதிபரை பொதுமக்கள் முன்னிலையில் தொங்கவிட வேண்டும்: அதிர்ச்சி தீர்ப்பு!
முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் அவர்களுக்கு சமீபத்தில் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்த நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்பு முஷாரப் இறந்து விட்டால் அவரது உடலை எடுத்து வந்து மூன்று நாட்கள் பொதுமக்கள் பொதுமக்கள் முன்னிலையில் தொங்கவிட வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 2001 ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியை நடத்தி நாட்டை கைப்பற்றிய முஷரப், 2007ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை அறிவித்தார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்றவர் இதுவரை நாடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு, குறிப்பாக தேசத்துரோக வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பில் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தீர்ப்பின் முழு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது அந்த தீர்ப்பில் முஷரப் குற்றவாளி என தெளிவாக நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கழுத்தில் தூக்கிட்டு இறக்கும் வரை தொங்க விடவேண்டும் என்றும், ஒருவேளை வெளிநாட்டிலுள்ள முஷரப் அங்கேயே மரணமடைந்து விட்டால் அவரது உடலை பாகிஸ்தானுக்கு எடுத்து வந்து பொதுமக்கள் மத்தியில் மூன்று நாட்கள் தூக்கில் தொங்க விடப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பாகிஸ்தானை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.