ஏற்கனவே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமீப காலமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போர் வலுவாகி கொண்டே வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் வலுவாக உள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு செக் வைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எதிரி நாட்டுடன் கைகோர்க்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான இந்த தொடக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த சண்டை போராக வெடிக்க காரணம் பாகிஸ்தானிலும் தாலிபான் ஆட்சி கொண்டு வர வேண்டும் என்று டி டி பி என்கிற அமைப்பு அவ்வப்போது பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
சமீபத்தில் பாகிஸ்தான் டி டி பி குழு முகாம் களில் வான்வழி தாக்குதலை நடத்தியது இதில் 40க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பின் இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுக்கும் என பாகிஸ்தானின் ஒரு எல்லை பகுதியை கைப்பற்றியது. எல்லைகளில் தீவிர ராணுவ படையை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தஜிகிஸ்தானிடம் உதவி கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் தாலிபான் ஆட்சிக்கு வந்ததை எதிர்க்கும் நாடுகளில் ஒன்று தஜிகிஸ்தான். பெரும்பாலும் தாலிபான்களை எதிர்க்கும் தலைவர்கள் அனைவரும் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் எப்போது பாகிஸ்தான் உதவி கிடைக்கும் என இருந்த நிலையில் பாகிஸ்தான் கோரியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு தாக்குதல் நடத்த கூடாது என செய்தி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.