பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் !

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் !

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலககோப்பை போட்டியில் அரை இறுதிப் போட்டியில்  இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி  இறுதி சுற்றுக்கு  முன்னேறியது.

இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் 

“இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 – 170/0 இடையே மோதல் நடக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலககோப்பையில்  பாகிஸ்தான் அணி இந்தியாவை 151/0  அதாவது 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.அதுபோல நடப்பு ஆண்டு  டி 20 உலககோப்பையில்  இங்கிலாந்து 170/0  அதாவது 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது,இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் பிரதமர் கிண்டல் செய்து உள்ளார்.

இதை குறித்து ,இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பாகிஸ்தான் பிரதமர்க்கு  பதிலடி கொடுத்துள்ளார்.இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளர்.

நீங்கள் மற்றவர்களின்  கஷ்டத்தில் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள் என்றும் அடுத்தவர்களின் தோல்வியில் நீங்கள்  ஆனந்தம் அடைகிறீர்கள். இதுதான் உங்களுக்கும் ,எங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Comment