இந்தியாவின் மீது தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். இதனால் நேற்று முதல் பாகிஸ்தான் இருக்கு நீ குடிநீர் ஆதாரமாக இருந்த சிந்து நதி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனை எதற்கு தற்பொழுது பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தில் கை வைக்க முடிவு செய்துள்ளது.
சிம்லா ஒப்பந்தம் மற்றும் அதன் பின்னணி :-
1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்தேஷ் நாட்டின் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த போரில் பாகிஸ்தான் படைகள் தோல்வியடைந்து சுமார் 90 ஆயிரம் பாகிஸ்தான் படை வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தன. அதன் பின் இரு நாடுகளும் எதிர்கால அமைதிக்காக சிம்லாவில் சந்தித்தனர். ஜூலை 2 1972 அன்று இந்த சிம்லா ஒப்பந்தமானது கையெழுத்திடப்பட்டது. இது இரு தரப்பு கூட்டு தேவையான ஒப்பந்தமாக செயல்பட்டு வருகிறது.
சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்கள் :-
✓ இரு நாடுகளும் மீண்டும் போர் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும்
✓ அனைத்து பிரச்சனைகளும் இருதரப்பு கலந்துரையாடலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்
✓ 1971 போரின்போது கைப்பற்றப்பட்ட நிலங்களை மீண்டும் பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் திருப்பிக் கொடுக்க வேண்டும்
✓ பாகிஸ்தான் கைதியாக இருந்த இந்திய ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டும் மற்றும் இந்தியா கைப்பற்றிய பாகிஸ்தான் வீரர்களையும் திருப்பி அனுப்ப வேண்டும்
✓ காஷ்மீர் பகுதியில் நிலையை மாற்றக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது.
சிம்லா ஒப்பந்தத்தை மீறினால் ஏற்படும் ஆபத்துக்கள் :-
சிம்லா ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் அவையும் தீர்மானங்களை தாண்டி இந்தியா பாகிஸ்தான் பிரச்சனைகள் அந்த இரு நாடுகளுக்குள் மட்டுமே பேச்சு வார்த்தை மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையை நிலைநாட்டி இருக்கக்கூடிய நிலையில், இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தானியர்கள் நிறுத்தி வைப்பதால் மூன்றாம் தரப்பு நாடாக மற்றொரு நாடு இந்தியா பாகிஸ்தான் இடையே நுழைந்து இந்த பிரச்சனைக்கான தீர்வு குறித்து பேசுவதோ அல்லது போரிடுவதோ போன்ற செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்.