பயங்கரவாதம், இன அழிப்பு பெரும்பான்மையின அடிமை வாதம் உள்ளிட்டவற்றால் அறியப்படும் நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து திகழ்ந்து வருவதாக ஐக்கிய நாட்டு சபையில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் 75-ஆவது பொது சபை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது .அதில் உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் காணொளி காட்சி மூலம் தங்களது உரைகளை உரையாற்றி வந்தனர்.
அதன்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையின்போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியுள்ளார். மேலும் ,இந்தியாவில் உள்ள உள்நாட்டு விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதரின் முதன்மை செயலாளர் மிஜிடோ வினிடோ பேசியுள்ளார்.
கூட்டத்தின்போது வன்முறைகளைத் தூண்டும் வகையில் நடந்து கொள்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.அவரையே குறிப்பிட்டு அவர் அந்த கருத்தை தெரிவித்துள்ளாரா ? என்று சந்தேகம் எழுவதாக இந்திய தூதர் கூறினர். ஐ.நா சபையின் மூலமாக வதந்திகள் உள்ளிட்டவற்றை பரப்புவதை பாகிஸ்தான் நாடு வழக்கமாக கொண்டுள்ளதாக , இந்திய தூதர் முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ,கடந்த 70 ஆண்டுகளாக பயங்கரவாதம், பெரும்பான்மையான அடிமை, இனஅழிப்பு ,அணு ஆயுத வர்த்தகம் போன்றவற்றை மட்டுமே மூலமாக கொண்ட பாகிஸ்தான் விளங்கிவருகிறது என்றும், ஐ.நா சபையில் குறிப்பிட்டிருக்கும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் பெரும்பான்மையானோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், கூறியுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு அரசு நிதியிலிருந்து ஓய்வூதியம் அளிக்கும் பெருமையும் பாகிஸ்தான் நாட்டையே சேரும் என்றும், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ‘தியாகி’ என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் கூறி இருப்பதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தெற்காசியாவில் இனப்படுகொலையால் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்திய நாடு பாகிஸ்தான் தான் என்றும், ஆனால் தற்பொழுது நஞ்சு நிறைந்த சொற்களைப் பயன்படுத்தி ஐநாவில் அந்நாடு உரையாற்றியது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் 30,000 முதல் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதாக அமெரிக்க நாடு கடந்த ஆண்டு வெளிப்படையாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்துக்கள் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரை கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்துவது பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளதாக இந்திய முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.