இஸ்லாமபாத்: ஆப்கானிஸ்தான் தாலிபான் மையங்களில் திடீரென தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான்.
பாகிஸ்தானில் தாலிபான் எதிர்ப்பு குழுக்கள் உள்ளனர். ஏன் அந்நாட்டிற்குல்லேயே தாலிபான் எதிர்ப்பு குழுக்கள் இருந்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருகின்ற தாலிபான் மையங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர் இதனால் இது அடுத்த போராக பார்க்கபடுகிறது.
ஆப்கானிஸ்தானின் தளவாட பகுதி எனப்படும் பர்மால் என்ற இடத்தில் பாகிஸ்தான் நேரடியாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட குறைந்தபட்சம் 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள தாலிபான்கள் தெஹ்ரீக் இ தலிபான் என அழைக்கப்படுகின்றனர். இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோள் பாகிஸ்தானில் தற்போது உள்ள ஆட்சியை தூக்கிவிட்டு தாலிபான் ஆட்சி வர வேண்டும் என்பதுதான்.
இவர்களுக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள சில பயங்கர வாத அமைக்கும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது வழக்கம். அப்படி பட்ட தாலிபான் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. இதுபோன்ற தாக்குதல் ஏற்கனவே மார்ச் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது வான்வழி தாக்குதலை மேற்கொண்டு உள்ளத்தால் இரு நாடுகளுக்கும் போர் ஏற்பட கூடும் என கூறப்பட்டு வருகிறது.