காஷ்மீர் பகுதியில் இருக்கக்கூடிய பஹல் காம் பகுதியை ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியா சுற்றுலா பயணிகள் 26 பேர் மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான சில முக்கிய ஒப்பந்தங்களை குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்திய அரசானது தற்காலிகமாக நிறுத்தியது.
ஒருபுறம் இந்தியா பாகிஸ்தானியர்களுக்கு 5 அதிரடி கட்டளைகளை வெளியிட்டதும் பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராக சில முக்கிய கட்டளைகளை பிறப்பித்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வெளியில் பறக்க கூடாது என்றும் இந்தியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் நீக்கப்படுகிறது என்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியாவால் நிறுத்த முடியாது ஒப்பந்தத்தை இந்தியா மீறி விட்டது என்றும் தேசிய அளவில் சென்று இதற்கான தீர்வை காண போவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவின் பிரதமர் அறிவித்தபடி இன்று இரவுக்குள் இந்தியாவில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட வேண்டும். இதற்கான பணிகள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி பாகிஸ்தானியர்கள் குறித்து பேசி இருப்பதாவது :-
மருத்துவ அவசர நிலை தொடர்பாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்து இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்களை தவிர மற்ற அனைவரையும் இன்று இந்தியாவை விட்டு திருப்பி அனுப்ப இருப்பதாகவும் மருத்துவ சாதனை திருப்பவர்கள் மற்றும் அவர்களுடன் வந்திருக்கக் கூடியவர்களுக்கு உடனடியாக திரும்பிச் செல்வதற்கான விலக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானியர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவதற்கான காரணம் அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை தான் என்றும் உயர் மருத்துவ சிகிச்சை சென்னை மற்றும் வேலூரில் இருக்கக்கூடிய முக்கிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் வந்து பதிவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தல்களை வைத்திருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இங்கு வந்திருப்பவர்களை நாங்கள் மனிதாபிமானத்துடன் கையாள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.