கோபியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பாக்கியா!! அடுத்து என்ன நடக்கும் என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடரை பார்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது. சீரியல் பார்க்க பிடிக்காதவர்கள் கூட இந்த தொடரை பார்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது முழுவதும் சுய மரியாதைவுடன் வாழ நினைக்கும் பெண்களுக்காக எடுக்கபடுகிற ஒரு நெடுந்தொடர்.இந்த தொடரில் பாக்கியா என்னும் கதாபாத்திரம் சுய மரியாதையுடன் கெத்தாக வாழ்வது போன்று அமைத்திருக்கும்.
இதில் பெண்கள் வீட்டு வேலை மட்டும்தான் செய்யா வேண்டுமா அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாகவும் அதனை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைக்கும் விதமாகவும் அமைக்கப்பட்ட தொடரை ஏராளமான பெண்கள் பார்த்து வருகின்றனர்.
மேலும் இந்த தொடரில் பாக்கிய தான் நினைத்தது போன்று இந்த வீட்டை தனது மீட்டு அவரது பெயரில் ரிஜிஸ்டர் செய்து உள்ளார்.அதன் பின் ரிஜிஸ்டர் செய்ய பாக்கியா ,அவரது மாமனார் ,மற்றும் கோபி என்று அனைவரும் ரிஜிஸ்டர் ஆபிஸ்க்கு புறப்பட்டனர்.
அதன்பின்பு அவரது பெயரில் அந்த வீடு நல்லபடியாக ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.அடுத்தடுத்து எழும் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி வைப்பது போன்று கோபி மற்றும் ராதிகா அந்த வீட்டில் இருந்து கொண்டு பாக்கியாவிற்கு சிக்கல் கொடுத்து கொண்டு வந்தனர்.
இனி வரும் தொடர்களில் கோபி முழு வில்லனாக மாற போகின்றார் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.