பல நன்மைகளை அள்ளித் தரும் பனங்கிழங்கு! மலச்சிக்கல் முதல் சர்க்கரை நோய் வரை குணப்படுத்தும்!
பனை மரம் மூலமாக கிடைக்கும் பனங்கிழங்கு நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தருகின்றது. பனை மரத்தில் இருந்து பனங்கிழங்கு மட்டுமில்லாமல் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனம்பழம் ஆகியவை கூட பல நன்மைகளை தருகின்றது. அந்த வகையில் பனங்கிழங்கும் நம்முடைய உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகின்றது. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பனங்கிழங்கு தரும் பல நன்மைகள்…
* பனங்கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. அதனால் நாம் பனங்கிழங்கு சாப்பிடும் பொழுது நமக்கு மலச்சிக்கல் பிரச்சனை சரியாகின்றது.
* பனங்கிழங்கு சாப்பிடுவேன் மூலம் அதிகமான உடல் பருமன் இருப்பவர்கள் தங்களுடைய உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.
* இதில் ஒமேகா 3 அமிலம் இருக்கின்றது. இதனால் இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
* உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாம். இதனால் உடல் சூடு தணியும்.
* சர்க்கரை நோய் இருப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
* பால்வினை நோய்களுக்கு பனங்கிழங்கு கூழ் மிகவும் நல்லது.
* பனங்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம்.