சேலம்: சேலம் ஜங்ஷன் அடுத்து உள்ள பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது அரசின் உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அருகில் இருக்கும் கிட்டத்தட்ட 15 கிராமக்கள் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்த்துள்ளனர். அந்த பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி விளையாட்டு மைதானம் ஏற்கனவே தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது என தகவல் வந்த நிலையில், தற்போது அந்த பள்ளியின் ஒரு பகுதி கட்டிடம் விற்பனை செய்யப்பட்டததாக சொல்லப்படுகிறது.
மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் நுழைவாயில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இந்த பள்ளியின் நடந்த சம்பவத்த அறிந்த பாமக எம்எல்ஏ அருள் அவர்கள் பள்ளிக்கு சென்றார். மேலும் அருள் அவர்கள் பள்ளியின் தாளாளர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பாமக எம்எல்ஏ அருள் திடீரென பள்ளி தாளாளர் காலில் விழுந்து, “பள்ளியை மூடும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்க.. பள்ளியை மூடாதீங்கம்மா” என்று கெஞ்சினார். மேலும் இந்த சம்பவம் அங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.