பான் கார்டு 2.0 திட்டம்!! மத்திய அரசின் புதிய வழிமுறை!!

Photo of author

By Gayathri

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பான் கார்டு 2.0 திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

PAN 2.0 திட்டத்திற்கான நிதி ரூ.1435 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வரி செலுத்துவோர் பதிவு சேவைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை செயல்படுத்துகிறது மற்றும் இதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது வரி செலுத்துவோர்களுக்கு மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும். PAN 2.0 ப்ராஜெக்ட்டின் கீழ் க்யூஆர் கோட் உடனான பான் கார்டு (PAN Card with QR Code) வழங்கப்படும் மற்றும் இந்த மேம்படுத்தல் செயல்முறை ஆனது முற்றிலும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

PAN 2.0 திட்டம் என்பது வரி செலுத்துவோரின் மேம்பட்ட டிஜிட்டல் அனுபவத்திற்காக PAN/TAN சேவைகளை தொழில்நுட்ப உந்துதல் மூலம் மாற்றியமைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் பதிவு சேவைகளின் வணிக செயல்முறைகளை மறு-வடிவமைப்பதற்கான மின்-ஆளுமை திட்டம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.