கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை!

Photo of author

By Divya

கோடி மகிமையை தரும் பஞ்சகவ்ய விளக்கு – தயாரிக்கும் முறை!

கோமாதாவிடம் இருந்து கிடைக்கும் சாணம், நெய், கோமியம், தயிர், பால் ஆகியவற்றை வைத்து பஞ்சகவ்ய விளக்கு செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பஞ்சகவ்ய விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்கும்.

பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்..

*மாட்டு சாணம்
*நெய்
*மாட்டு கோமியம்
*தயிர்
*பால்

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் அளவு ,மாட்டு சாணம், சிறிது மாட்டு நெய், தயிர், பால், மாட்டு கோமியம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் ஒரு அகல் விளக்கு எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள சாணக் கலவையை வைத்து விளக்கு போல் செய்து எடுத்து வெயில் படும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு ஓவ்வொரு விளக்காக செய்து வெயிலில் காயவைக்கவும். விளக்கில் ஈரம் இருக்கக் கூடாது.

பிறகு எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும். பிறகு பூஜை அறையில் அகல் விளக்கு ஏற்றுவது போல் இந்த விளக்கிலும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும். ஒரு தட்டின் மீது இந்த விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். விளக்கு முழுவதுமாக எரிந்து ஒருவித தெய்வீக வாசனை வீடு முழுவதும் பரவத் தொடங்கும்.