பொதுமக்கள் புகாரிக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்!!! இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!!!

Photo of author

By Sakthi

பொதுமக்கள் புகாரிக்கும் ஊராட்சி மணி அழைப்பு மையம்!!! இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்!!!

பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஊராட்சி மணி அழைப்பு மையத்தை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இன்று(செப்டம்பர்26) திறந்து வைக்கவுள்ளார்.

தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் புகார் தெரிவிக்கும் வகையில் ஊராட்சி மணி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது புகார்களை தெரிவிக்கும் வகையில் 155340 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையத்திற்கு வைக்கப்பட்டுள்ள ஊராட்சி மணி என்ற பெயர் மனுநீதிச் சிவனின் கதையை அடிப்படையாக வைத்து வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை தீர்க்க அழைப்பு மையம் நிர்வாகி மூலமாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ உரிய செயல்பாடுகள் எடுக்க நடவடிக்கை முன்னெடுக்கபடும்.

மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் புகார்கள் பெறப்படவுள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் அனைத்தும் தீவிரத்தன்மை அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு தீர்வு காணப்படவுள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாக பெறப்படும் புகார்கள் அனைத்தும் குறைதீர் மையத்தில் மூலமாக தீர்வு காணப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.