பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

தற்போது வரும் பெரும்பான்மையான செய்திகளில் தவறு செய்பவர்களுடன் எப்படி பழக்கம் என்றால் இணையதளம் அல்லது முகநூல் என்றே குறிப்பிடுகிறார்கள். இணையத்தில் யாரும் உண்மையான தொழில், படிப்பு, விலாசங்களை பதிவிடுவதில்லை என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ? அப்போது தான் இதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறையும்.

பெங்களூர் புறநகர் பகுதியில் ஆனேக்கல் தாலுக்கா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான பிளவரஹல்லியை சேர்ந்த அகமது பாஷா. இவர் இதே பகுதியில் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு ஹெப்பாலை சேர்ந்த இளம்பெண்ணுடன் முகநூல் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர். இந்த நபர் அந்த பெண்ணிடம் தான் கவுன்சிலர் என்று கூறி உள்ளார். அந்த இளம்பெண்ணும் அதை நம்பி உள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு மாடலிங் துறையில் தனக்கு விருப்பம் என தெரிவித்த நிலையில், உடனே அகமது தனக்கு அந்த துறையில் நிறைய பேரை தெரியும் என கூறி உள்ளார்.

இதை தனக்கு சாதகமாக அகமது பயன்படுத்தி கொள்ள நினைத்த அந்த நபர் அந்த பெண்ணுக்கு போன் செய்து உங்களுக்கு உதவி செய்கிறேன் என்றும், அந்த துறையில் உள்ளோருடன் வேலை வாங்குவது விசயமாக பேச வேண்டும் என்று வீட்டுக்கு வர சொல்லி உள்ளான்.

அந்த பெண்ணும் அந்த நபரை நம்பி அவன் வீட்டுக்கு சென்ற சமயம் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளான். அந்த பெண்ணோ கத்தி கூச்சல் போட்டதனால், அந்த நபர் தனது வீட்டில் வைத்து இருந்த துப்பாக்கியை வைத்து அந்த பெண்ணை சுட்டு விடுவதாக மிரட்டி துப்பாக்கி முனையில் நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்தும், கற்பழிக்கவும் செய்துள்ளான்.

அதன் பின் இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் புகைப்படங்களை இணையத்தில் படிவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இருந்த போதிலும் அந்த பெண் மிரட்டலுக்கு பயப்படாமல் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

அந்த புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொள்ளும்போது அந்த அப்துல் இது போல் 10 ம் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களையும் மிரட்டியே பலாத்காரம் செய்ததும் வெளியில் வந்துள்ளது. மேலும் அவரிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment