பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!!    

0
206
Pandian Stores Main Character Heading To Big Screen!!
Pandian Stores Main Character Heading To Big Screen!!
பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!!
தற்போது தொலைக்காட்சிகளில் முகத்தை காட்டும், ஆண்களும், பெண்களும் பிரபலமாகி வருகின்றனர். அவர்களுக்கு என ஒரு தனி  ரசிகர் பட்டாளமும்  சமூக வலைத்தளங்களில் உருவாகியுள்ளது.
சிரீயலில் நடிக்கும் நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு பிசியான நடிகர்களாக வலம் வருகின்றனர்.அந்த வகையில் நிறைய சீரியல் நடிகர்கள் சினிமாவை நோக்கி நகர்ந்து கொண்டே வருகின்றனர். சீரியயில் நடிக்கும் நடிகர் ஒருவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர் தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது.அந்தத் தொடரில் கண்ணன் என்னும் கதாபாத்தில் நடிக்கும் சரவணன் அவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தற்போது குவிய தொடங்கியுள்ளது. இதையடுத்து அவர் பாண்டிய ஸ்டோர் சீரியல் இருந்து விலக போவதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாண்டிய ஸ்டோர் சீரியலில் 4 ஆண்டுகளாக தொடர்ந்து சரவணன் அவர்கள் கண்ணன் என்னும் தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்தப் பாத்திரத்திற்கு நடிகர் சரவணன் அவர்கள் கச்சிதமாக பொருந்தி உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தற்போது சினிமா பட வாய்ப்புகள் வருவதால் அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. கண்ணன் கதாபாத்திரத்திற்கு  நடிகர் நவீன் வெற்றி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நடிகர் நவீன் வெற்றி யார் என்றால் அது விஜய்   தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதி” என்ற தொடரில் கதாநாயன் தமிழ் அவர்களுக்கு தம்பியாக நடிக்கும் நடிகர் தான்.
நவீன் வெற்றி தான் சரவணன் பாத்திரத்திற்கு அடுத்து நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில்  நடிக்கும் நடிகை தீபாவும், நடிகர் சரவணனும் நெருக்கமாக நட்பாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது.