பீதி அடையும் மக்கள்! தொடர்ந்து அதிகரித்து வரும் டைபாய்டு பாதிப்பு!
கடந்த வாரங்களில் இருந்து சென்னையை பொருத்தவரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகளில் 30 சதவீத பேருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
இந்த காய்ச்சலில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க தனிநபர் சுகாதாரம் மிக அவசியம், காய்சிய நீரை மட்டுமே பருக வேண்டும். கைகளை நன்கு கழுவும் பழக்கத்தை குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் டைபாய்டு தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குழந்தைகள் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டைப்பாய்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவை ஆறு மாதங்களிலேயே வழங்கப்படுகின்றன. இவரை தடுப்பூசி செலுத்தாவிடிலும் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே சிறப்பு தவணையாக அதனை செலுத்திக் கொள்ள வேண்டும்.
டைபாய்டு நோய்களின் அறிகுறி
உடல் சோர்வு, கடுமையான காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், தொண்டை வலி, உடலில் தடிப்புகள், வயிற்று உபாதைகள் . சுகாதாரமற்ற உணவுகள், பாதுகாப்பற்ற குடிநீர், சுகாதாரமற்ற வாழ்க்கை சூழல்,போன்றவற்றின் காரணமாகத்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என மருத்துவர் கூறுகின்றனர்.