cricket: இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையிலான 5 வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இரண்டாவது நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. மேலும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியை 181 ரன்களில் வீழ்த்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் கே எல் ராகுல் 13 ரன்களிலும் அடுத்ததடுத்து களமிறங்கிய விராட் 6 ரன்களிலும், கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். அவர் முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்சில் இதுதான் அதிக ரன்.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ரிஷப் டெஸ்ட் போட்டி என்பதை மறந்து அவரது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார். அபாரமாக விளையாடி 29 பந்துகளில் அரைசதத்தை பதிவு செய்து அதிவேக அரைசத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்கு முன் அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும் ரிஷப் பண்ட் தான். இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துக்களுக்கு அதிவேக அரை சதத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இந்த 5 வது போட்டியில் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 61 ரன்கள் விளாசி பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட் பறிகொடுத்தார்.