இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி 4 போட்டிகளில் 4 போட்டிகள் வெற்றிபெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று மூன்றாவது போட்டியை சமன் செய்துள்ளது.
மேலும் 26 ம் தேதி தொடங்கிய 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 140 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய போது இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 164 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது.
இந்நிலையில் மூன்றாம் நாள் இன்று தொடங்கிய நாளில் முதலில் பேட்டிங் செய்த பண்ட் அவர் எப்போதும் அடிக்கும் அந்த ஷாட் க்கு ஆஸ்திரேலியா அணி பீல்டிங் செட் செய்த பின்னும் அவர் அதே திசையில் அடித்து அவுட் ஆகினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர் முட்டாள் கண்ணு தெரியலையா உனக்கு தான் பீல்டு செட் பண்ணிருக்காங்க அங்கேயே அடிச்சு அவுட் ஆகிருக்க உண்மையில் அவர் அடித்த ஷாட் ஒரு முட்டாள் தனமான ஷாட் என கருத்து தெரிவித்துள்ளார்.