பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!!

Photo of author

By Sakthi

பெருமாள் உருவத்தில் இருந்த பப்பாளி!!! பரவசத்தில் மூழ்கிய கிராம மக்கள்!!!

வேலூரில் பப்பாளியில் பெருமாள் உருவம் இருந்ததால் அதை பார்த்த பொதுமக்கள் அதற்கு நாமம் இட்டு வணங்கி பரவசத்தில் மூழ்கினர்.

வேலூர் முத்து மண்டபம் பகுதியில் வசித்து வரும் ரங்கநாதன் என்பவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். பழவியாபாரி ரங்கநாதன் அவர்கள் தினமும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் என்ற பகுதிக்கு சென்று விவசாய நிலங்களில் உள்ள பப்பாளிகளை வங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.

வழக்கம் போல நேற்று(செப்டம்பர்22) மாலை ரங்கநாதன் அவர்கள் அப்புக்கல்லில் இருந்து பப்பாளி பழங்களை வாங்கி வாங்கி வந்தார். அதை இன்று(செப்டம்பர்23) காலை வியாபாரம் செய்வதற்காக தரம் பிரித்தார். அப்பொழுது ஒரு பப்பாளி மட்டும் பெருமாள் உருவத்தில் இருந்தது.

இதையடுத்து ரங்கநாதன் அவர்கள் இதை பற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கூறினார். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த பப்பாளியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் அந்த பப்பாளிக்கு நாமம் இட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

அதன் பின்னர் வேலூரில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் பெருமாள் வடிவத்தில் இருந்த பப்பாளியை கொண்டு வந்து வைத்தனர். பெருமாள் வடிவத்தில் இருக்கும் இந்த பப்பாளியை பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் பெருமாள் வடிவத்தில் வந்த பப்பாளியால் அப்பகுதி மக்கள் அனைவரும் பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.