தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு

0
110
TN Assembly-News4 Tamil Online Tamil News1
TN Assembly-News4 Tamil Online Tamil News1

தமிழகத்தில் புதிய முயற்சியாக காகிதமில்லா பட்ஜெட்! அசத்தும் தமிழக அரசு

தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

வரும் 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் நிதி – நிலை அறிக்கையை புதியதாக பதவியேற்றுள்ள திமுக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்குமுன் பட்ஜெட் என்றால் புத்தகம் போன்ற வடிவில் தான் தரப்படும்.ஆனால் இந்த முறை இது வழக்கமான புத்தக வடிவில் இல்லாமல், காகிதம் இல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது.

அதற்கு மாறாக ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைக்கு முன் உள்ள மேசையில் கையடக்க கணினி வைக்கப்படும்.இந்த கணினியின் வாயிலாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை பார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கையடக்க கணினியை உறுப்பினர்களின் மேசைகளில் நிரந்தரமாக பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் கொண்டு வரப்படும் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் மின்னணு நிறுவனமான எல்காட் மூலம் கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக அனைவருக்கும் PDF வடிவில் பட்ஜெட் கோப்புகள் அனுப்பி வைக்கப்படும். மேலும் இவ்வாறு பொருத்தப்படும் இந்த கையடக்க கணினியில் சட்டப்பேரவை நிகழ்வுகளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. தற்போது செயல்படுத்தப்படும் இந்த இ- பட்ஜெட் முறையால், காகிதச் செலவு மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகர்நாடகாவை எதிர்த்து தமிழக பாஜக உண்ணாவிரத போராட்டம்!! மாட்டுவண்டியில் மாநில பாஜக தலைவர்!!
Next articleபிகில் படம் 300 கோடி வசூலை பெற்றது என்பது வடிகட்டின பொய்!! சர்ச்சையை கிளப்பும் திரையரங்கு உரிமையாளர்!!