பெற்றோர் தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு ஏன் தேன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

Photo of author

By Divya

பெற்றோர் தெரிந்து கொள்ளுங்கள்!! குழந்தைகளுக்கு ஏன் தேன் கொடுக்க வேண்டும் தெரியுமா?

Divya

நம் பாரம்பரிய மருத்துவத்தில் தேன் ஒரு முக்கிய மருந்துப் பொருளாக பார்க்கப்படுகிறது.சளி,காய்ச்சல் என்று பல பிரச்சனைகளுக்கு தேன் சிறந்த மருந்தாக திகழ்கிறது.தினமும் தேன் உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.தேனில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலுக்கு வலிமை அளிக்கிறது.

பலவித நன்மைகள் கொண்டிருக்கும் தேனை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? கொடுக்க கூடாதா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.இருமல்,காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை உங்களில் பலர் வழக்கமாக வைத்திருப்பீர்.ஆனால் ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

ஒரு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு தேன் கொடுத்தால் அவர்களின் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டுவிடும்.இது தவிர சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளை குழந்தைகள் சந்திக்க நேரிடும்.இதனால் உடல் பலவீனமடைந்து காய்ச்சல் பாதிப்பை சந்திக்க நேரிடும்.அதேபோல் தேனில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதால் அதை ஒரு வயதிற்கு கீழ் இருக்கின்ற குழந்தைக்கு கொடுத்தால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

ஆனால் ஒரு வயது குழந்தைக்கு தேன் கொடுக்கலாம்.தினமும் சிறிதளவு தேன் கொடுத்தால் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் சிறிதளவு தேனை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் ஆற்றல் அதிகரிக்கும்.குழந்தைகளின் சரும ஆரோக்கியம் மேம்பட தேன் சாப்பிட கொடுக்கலாம். இருப்பினும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாம்.ஆனால் ஒரு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைக்கு தேன் கொடுப்பதை நிச்சயம் தவிர்த்துவிட வேண்டும்.