இப்பொழுது உள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே புத்திசாலி தனமாக வளர்கின்றனர்.குழந்தைகளின் IQ லெவலை அதிகரிக்க பெற்றோர் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர்.குழந்தைகளுக்கு ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலத்தில் IQ லெவல் அதிகமாக வளரும்.
இந்த வயதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சதுரங்கள்,புதிர் விளையாட்டு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கின்றனர்.குழந்தைகளுக்கு பிற மொழிகள் கற்றுத் தருதல்,குறுக்கெழுத்து புதிர் போன்றவற்றின் மூலம் குழந்தையின் மூளை செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இதுபோன்ற செயல்கள் மூலம் குழந்தையின் IQ லெவலை அதிகரிக்க முடியாது.இந்த ஆக்டிவிட்டிஸ் குழந்தையின் மூளை செயல்திறனை அதிகப்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு கார்டு விளையாட்டு சொல்லி தருவதை தவிர்த்துவிட்டு இயற்கை சூழலில் அவர்களை வளர்த்தால் IQ லெவல் அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு கதை சொல்லுதல்,பிரச்சனைகளுக்கு தீர்வு இப்படி காண்பது போன்றவற்றை சொல்லி கொடுத்தால் அவர்களின் மூளை செயல் திறன் அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிய நீங்கள்தான் விளையாட்டு பொம்மை.நீங்கள் அவர்களிடம் அதிக நேரத்தை செலவிட்டால் அவர்களின் குழந்தை பருவ வளர்ச்சி நன்றாக இருக்கும்.குழந்தைகளை ஓடிஆடி விளையாட வைத்தால் அவர்களின் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.குழந்தைகள் நன்றாக விளையாட ஆரம்பித்தால் அவர்களின் IQ லெவல் அதிகரிக்கும்.
அதேபோல் பெயிட்டிங்,ஓவியம்,பாடல் கேட்க வைப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைத்தால் அவர்களின் மூளை நுண்ணறிவுதிறன் மேம்படும்.குழந்தைகளை EQ அதாவது Emotional Quotient சூழலில் வளர்த்தால் அவர்களின் IQ லெவல் அதிகரிக்கும்.