காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்… திருமணம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!

0
118

 

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்… திருமணம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி…

 

ஆந்திரா மாநிலத்தில் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்து கொண்டு காதல் ஜோடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தின் செட்டேவாரி பள்ளி பகுதியில் 17 வயதாகிய இளம்பெண்ணும், அதே மாவட்டம் லதிகம் கிராமத்தை சேர்ந்த 17 வயாதிகிய வாலிபரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர்.

 

இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் பொழுது நட்பாக பழகி வந்த நிலையில் நட்பு காதலாக மாறியது. இருவரின் காதல் விவரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண், வாலிபர் இருவருடயை பெற்றோர்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

இதையடுத்து ஆகஸ்ட் 19ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண்ணும் வாலிபரும் திருப்பதி அருகே உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரையும் காணாததால் பெற்றோர்கள் பல பகுதிகளில் தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இறுதியில் பெற்றோர்கள் புங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

பெற்றோர்கள் புகார் அளித்ததை அறிந்த காதல் ஜோடி தங்களை கண்டுபிடித்து பிரித்து விடுவார்கள் என்று யோசனை செய்து இறுதியாக தற்கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த காதல் ஜோடி திருப்பதி அருகே பீளேரு சோதனைச் சாவடி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 

நேற்று மாலை அந்த வனப்பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் காதல் ஜோடி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பக்கார்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பக்கார்பேட்டை காவலர்கள் காதல் ஜோடியின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous article‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!
Next articleபெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு!!