‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!

0
51

‘நீட்’ தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாநிலங்கள்!!

 

 

இந்திய மாணவர்கள் மருத்துவத் துறையில் இருக்கும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நீட் தேர்வு இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கு அவசியமான ஒன்றாகும்.அது மட்டுமின்றி இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கும் நீட் தேர்வு அவசியமாகும்.

 

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் புதிய புள்ளி பட்டியல் விவரத்தை நீட் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது.இம்மாநிலத்தை சேர்ந்த 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பித்து இருக்கின்றனர்.இதனால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இம்மாநிலம் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதையடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ள கர்நாடக மாநிலத்தில் 1 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர்.இதனை தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ள தமிழ்நாட்டில் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர்.

.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்

திரிபுரா,மேகாலயா,மிசோரம்,நாகாலாந்து,கோவா,உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் இப்பட்டியலில் அடுத்தடுத்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த ஆண்டு 20 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 11 லட்சத்து 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.இதில் சுமார் 1 லட்சத்து 39 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தை பெற்றுள்ளது.இதையடுத்து 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றது.இதையடுத்து 1 லட்சத்திற்கும் கீழ் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் கேரளா, கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பிடித்துள்ளது.இந்நிலையில் நடப்பு ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 மாணவர்களில் 8 பேர் டெல்லி,7 பேர் ராஜஸ்தான் மற்றும் 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.