பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

Photo of author

By Parthipan K

15 வயது சிறுமியை 50,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில போபாலில் 15 வயது சிறுமியின் தாயார் அவரது கணவர் இறந்து விட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் பாசமான இருந்து வந்த வளர்ப்புத்தந்தை நாளடைவில் உண்மையான முகத்தை காட்ட தொடங்கியுள்ளார்.

15 வயது சிறுமியை வைத்து பணம் சம்பாதிக்க வளர்ப்புத்தந்தை திட்டமிட்டு ,அருகில் வசிக்கும் 35 வயது குடிகார இளைஞனுக்கு 50,000 ரூபாய் பணத்திற்காக சிறுமி விற்றுள்ளார்.

அதன் பிறகு அந்த சிறுமியை தினம் தினம் கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளார் .குடிகார இளைஞன் தினமும் குடித்துவிட்டு சிறுமியை கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொடுமை தாங்க முடியாத அந்த சிறுமி குழந்தைகள் நல மையத்தை தொடர்பு கொண்டு குழந்தையின் நிலையை குறித்து கூறியுள்ளார்.

பிறகு அந்த சிறுமியை குழந்தை நல மையத்தின் உதவியுடன் தாயிடம் சேர்த்தனர். இந்நிலையில் சிறுமியை விலைக்கு வாங்கிய இளைஞன் தினமும் குடித்துவிட்டு தன்னுடன் வருமாறு தகராறு செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் புகார் கொடுத்துள்ளனர்.மீண்டும் அந்த சிறுமி மைனர் என்பதால் அவரது திருமணம் செல்லாது என குறிப்பிட்டுள்ளனர்.