சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!

Photo of author

By Hasini

சமைக்க சொன்ன பெற்றோர்! ஆத்திரத்தில் மகள் செய்த வேலை!

பிள்ளைகளிடம் எது பேசினாலும் இனி யோசித்து பேச வேண்டும் போல. நம் பிள்ளைகள் தானே என்று நாம் எதார்த்தமாக பேசுகிறோம். ஆனால் அவர்கள் எந்த மன நிலையில் உள்ளனர் என யோசித்து பேச வேண்டும் என்பது போல் உள்ளது இந்த செய்தி.

நம் குழந்தைகளை சிறுவயது முதலே சிறிது கண்டிப்புடனே வளர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூட கூறி வருகின்றனர். பின் எதோ கோவத்தில் நாம் பேசினால் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.

ஜெயராமன்-புனிதா என்ற தம்பதி பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு 21 வயதான தர்ஷினி என்ற மகள் உள்ள நிலையில், இவர் பி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

தோட்ட வேலை செய்து வரும் இந்த தம்பதி நேற்று முன்தினம், வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பிய போது, வீட்டிலிருந்த தர்ஷினி சமையல் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் தர்ஷினியை, பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து அவர், தன்னை திட்டி விட்டார்கள் என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை ஜெயராமனும், புனிதாவும் தோட்ட வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியே இருந்த தர்ஷினி சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சற்று நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய பெற்றோர், தர்ஷினி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், தர்ஷினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.